5-10 ஆண்டுகளுக்கு முன்பே கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைந்து கொண்டே வந்து¸ இறுதியில் சர்க்கரை நோயாக மாறுகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பு ஒருவருக்கு எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறிய உதவும் பரிசோதனை தான் GTT (குளுக்கோஸ் தாங்குதிறன் பரிசோதனை ) என்கிறோம்.
சர்க்கரை நோயை குண படுத்த முடியாது. ஆனால் கட்டுபடுத்த முடியும். சர்க்கரை நோயை வெல்வது என்றால் ¸ கட்டுபடாத சர்க்கரை நோயினால் வரக்கூடிய கொடிய பின்விளைவுகளை தடுத்து ¸ நல்ல வாழ்க்கையை வாழ்வதே ஆகும்
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன்மூலம் சர்க்கரை நோயுடன் நலவாழ்வு வாழ முடியும். மேலும் சர்க்கரை நோயினால் உச்சி முதல் பாதம் முடிய அனைத்து உறுப்புகளும் பாதிப்படையலாம். குறிப்பாக¸
போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் ¸ உணவு முறை¸ உடற்பயிற்சி மற்றும் மனஅமைதி முக்கியத்துவம் அறிந்து வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தால் நலவாழ்வு வாழ முடியும்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் சர்க்கரைநோய் தோன்றி குழந்தை பிறந்த உடன் சர்க்கரைநோய் மறைந்து போவதையே கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes) என்கிறோம். இந்த தாய்மார்களுக்கு எதிர்காலத்தில் சர்க்கரைநோய் வரும் வாய்ப்புள்ளது. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் உடல்பருமன்¸ சர்க்கரை நோய் வரும் ஆபத்து உள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோயை உடனடியாக கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதால் மட்டுமே¸ அந்த தாய்க்கும் சேய்க்கும் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும். அதற்கு கர்ப்பகால சர்க்கரை நோய் (GDM) கண்டறியும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ... அவசியம் ... அவசியம் ...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்¸ அவருக்கும் அவர்தம் குழந்தைக்கும் சர்க்கரை நோயைத் தடுத்து நலவாழ்வு வாழவும் ‘கர்ப்பகால சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு/விழிப்புணர்வு முகாம்கள்’ எங்களது விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் & திண்டுக்கல் சர்க்கரை நோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் நடத்தி வருகிறோம்.
ஆகவே இதைப் பற்றிய விழிப்புணர்வை முடிந்தவரை சமுதாயத்தில் ஏற்படுத்துவது அவசியம்.
இன்றைய தினம் இந்தியாவில் 6 முதல் 7 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் என ஆய்வு கூறுகிறது. மேலும்¸ இந்தியாவில் 20% இளைஞர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் அதிக உடல் எடையும்¸ உடற்பருமனும் உள்ளவர்கள்¸ இவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம்¸ மாரடைப்பு¸ பக்கவாதம்¸ கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஆரோக்கியமான உணவு முறைகளும்¸ முறையான¸ சரியான உடற்பயிற்சிகளும் செய்வதன் மூலம் உடற்பருமனைக் குறைக்க முடியும்.
Retinopathy - கண்பாதிப்பு : இரத்தநாளங்கள்¸ நரம்புகள்¸ விழித்திரை¸லென்சு¸ பாப்பா¸ இவையாவும் கண்ணின் உறுப்புகள் ஆகும். இரத்த நாளங்கள் அடைப்பட்டு போவதாலும்¸ இரத்தம் கசிவதாலும் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை குறைகிறது. சிலருக்கு நரம்புகளும்¸ விழித்திரையும் திடீரென்று செயலிழந்து கண்ணை குருடாக்கலாம். இது சர்க்கரை இருப்பதே தெரியாத நோயாளிகளுக்குக் கூட ஏற்படலாம். இது ஓர் அளவுக்குதான் குணப்படுத்தக் கூடிய நோய் என்பதால் வருமுன் காப்பது அறிவுடைமையாகும்.
Nephropathy - கிட்னி பாதிப்பு : சர்க்கரை நோயாளிகளுக்கு கிட்னி பாதிக்கக கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இரத்தச் சர்க்கரை அளவுகளின் ஏற்றத்தாழ்வுகள் கிட்னியின் செயல் திறனை பாதிக்கும். கிட்னி பலகீனமடையும்.
அதனால் சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் இரத்தச் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியம். அப்போதுதான் Stage II, Stage III கிட்னி பாதிப்புகள் வராமலும் டயாலிஸிஸ் செய்யும் நிலையை அடையாமலும் பாதுகாக்க முடியும்.
Qualified Lab Technician முலமாக துல்லியமான பரிசோதனை முடிவுகளை நமது ஆய்வுக் கூடத்தில் அளித்து வருகிறோம்.
எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு தெளிவான பதில் அளித்து¸ அவர்களை விழிப்புணர்வுடன் வாழ செய்வதே எங்களின் நோக்கமாகும்.
இணைந்து இந்த பயிற்சி வகுப்புகள் நமது திண்டுக்கல் விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தில் கடந்த 6 வருடங்களாக நடத்தி வருகிறோம். நமது மையத்தில நடக்கும் இந்த பயிற்சிக்கு நமது சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் C.முரளிதரன் அவர்கள் ‘Certified Trainer’ ஆகவும்¸ நமது மையம் ‘Diabetic Education’ பயிற்சி நடத்தி ‘Certified Training Centre’ ஆகவும் உள்ளது என பெருமிதத்துடன் கூறுகிறோம்.
இந்த பயிற்சி வகுப்பின் நோக்கம் சர்க்கரை நோயைத் தடுப்பது எப்படி¸ சர்க்கரை நோயோடு நலவாழ்வு¸ சர்க்கரை நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள்¸ பராமரிப்பு முறைகள் போன்ற அரிய தகவல்களை கற்று கொண்டு அதனை தங்கள் பணியாற்றி வரும் மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுத்த இப்பயிற்சி உறுதுணையாக இருக்கிறது.
இந்தியாவில் கிட்டதட்ட 90 மையங்களில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்புகள் இயக்குநர்களாக மும்பையில் புகழ்பெற்ற சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் டாக்டர். சஷாங்ஜோசி¸ உலக புகழ்பெற்ற சென்னை சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர். வி. மோகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். நமது மையத்தின் வாயிலாக பல மருத்துவமனைப் பணியாளர்கள் இப்பயிற்சி பெற்று மேலும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதுணையாக இருக்கும். இம்மருத்துவர் இருவருக்கும் நமது மையத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சில அறக்கட்டளைகள் மூலமாக இயலாத முதல்வகை சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலினை இலவசமாக வழங்கி வருகிறோம்.
இதுவரை நமது விஜயா கிளினிக் சர்க்கரை நோய் சிகிச்சை மையம் சார்பில் 992 முகாம்கள் சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக நடத்தி உள்ளோம். மேலும் சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு முகாம்கள்/கண்காட்சிகள் போன்றவையும் 1996 – முதல் 2022 முடிய நடத்தி வருகிறோம். வேடசந்தூர்¸ பட்டுக்கோட்டை¸ எடப்பாடி¸ பள்ளப்பட்டி¸ அரவக்குறிச்சி¸ கரூர்¸ தேனி¸ மதுரை போன்ற பல்வேறு இடங்களில் இரண்டு நாட்கள் முகாம்கள் நடத்தி உள்ளோம்.
கால் பாதுகாப்பு என்பது சர்க்கரை நோய் சிகிச்சையில் மிக முக்கியமான ஒன்று.
இரத்தத்தில் உள்ள அதிகப்படியாக சர்க்கரை கொழுப்பாக மாறி காலின் இரத்த குழாய்கள் அடைத்துக் கொள்வதால் இரத்த ஓட்டம் பாதித்து புண்கள் ஆறுவதற்கு தேவையான ஊட்டசத்துகளை அளிக்க முடியாததால்¸ சிறுபுண்கள் பெரிய பள்ளங்களாகி கால்கள் பாலமாக வெடிக்கலாம். காலையே துண்டிக்க நேரலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவதால் சர்க்கரை மூட்டையை நாடிவரும் எறும்புகள் போல கிருமிகள் தொற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.
பாதத்தில் ஆணியாகத் தொடங்கி வாழ்க்கையின் கடையாணியையே கழற்றி விடும். ஆறாத புண்களும்¸ புரையோடிய திசுக்களும் உங்கள் கால்களை நாற்றமடிக்க செய்து நகர முடியாமல் நரக வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
கால் பிணிகளால் பணிக்கு செல்வது தடைப்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு¸ மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும்.
எனவே¸ ஒவ்வொரு சர்க்கரை நோயாளியும்¸ ஆண்டுக்கு ஒரு முறையாவது கால் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
தகுந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் தகுந்த காலணிகளை தேர்வு செய்து வீட்டுக்குள்ளும்¸ வெளியிலும் பயன்படுத்துவதன் மூலமாகவும்¸ இரத்தச்சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமாகவும் கால்களை காப்பாற்றிக் கொள்ளலாம்
சர்க்கரை நோயளிகளுக்கு காலை 9.00 மணி முதல் 8.00 மணி வரை இலவசமாக உணவுமுறை ஆலோசனை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் பற்றிய ஆலோசனை வழங்கி வருகிறோம்.